விஜய் உடன் கூட்டணி என்பதை காலம் தீர்மானிக்க வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஒரே கொள்கையாக இருந்தால் கூட்டாகதான் நிற்க வேண்டும் என இல்லை. சேர்ந்து நிற்க கூடாது என்றும் இல்லை. அதனை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். என் தம்பி (விஜய்) முடிவு செய்ய வேண்டும் என்றார்.