திருக்கோவிலூர் - Tirukoilur

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்திற்கு விருது

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்திற்கு விருது

திருக்கோவிலூர் பகுதியில் செயல்பட்டு வரும், ரோட்டரி கிளப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி கடந்த 2023-24ம் ஆண்டில் தொடர்ந்து கண் பரிசோதனை முகாம், போக்குவரத்து குறித்து விழிப்புணர் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்ததை தொடர்ந்து முன்னாள் மாவட்டத் துணை ஆளுநர் அன்பழகன் விருதினை ரோட்டரி சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். மேலும் கடந்த முறை சிறந்த ரோட்டரி சங்க செயலாளராக பணியாற்றியதற்கு, தற்போதைய ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமாருக்கு விருதினை வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர் எஸ். எஸ். வாசன், செயலாளர் கோதம்சந்த், பொருளாளர் சௌந்தரராஜன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சரவணன், அமரஜோதிபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


விழுப்புரம்