சங்கராபுரம் - Sankarapuram

சங்கராபுரம்: இந்திய கம்யூ., கட்சி மாநாடு

சங்கராபுரம்: இந்திய கம்யூ., கட்சி மாநாடு

சங்கராபுரத்தில் இந்திய கம்யூ. , கட்சி மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு சசிகுமார் தலைமை தாங்கினார். முரளி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சிவாஜி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட குழு ஸ்டாலின், மணி, மணிமாறன், பாஸ்கர், மகாலிங்கம், சக்திவேல், மேகலா வாழ்த்தி பேசினர். மாநாட்டில், சங்கராபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு போதுமான டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். விவசாய மண் சாலைகளை தார் சாலையாக மாற்ற வேண்டும். நெல், கரும்பு, மரவள்ளி பயிருக்கு கட்டுபடியாக கூடிய விலை வழங்க வேண்டும். நகர பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பழனி நன்றி கூறினார்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி