சங்கராபுரம் - Sankarapuram

சங்கராபுரம்: தேங்கி நின்ற மழைநீர்: பொதுமக்கள் அவதி

சங்கராபுரம்: தேங்கி நின்ற மழைநீர்: பொதுமக்கள் அவதி

சங்கராபுரம், பூட்டை சாலையில் சார்பதிவாளர் அலுவலகத்தின் எதிரில் இருந்து, அரசு மருத்துவமனை வரை பள்ளமாக உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள பள்ளங்களில் அதிகளவில் நீர் தேங்குகிறது. நேற்று  (ஏப்ரல் 3)  பெய்த மழையால், வழக்கம்போல, நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.  இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் அங்குள்ள பள்ளத்தை சரிசெய்து, மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி