சென்னையை தலைமை மையமாகக் கொண்ட Raptee.HV என்ற EV Startup நிறுவனம், இந்தியாவின் முதல் HV தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் T-30 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதை கார் சார்ஜிங் நிலையங்களிலும் சார்ஜ் செய்யலாம். Raptee.HV வாகனம் 250-300 CC ICE வாகனங்களுக்கு நிகரான செயல்திறனைத் தரக்கூடியது. Raptee.HV மோட்டார் சைக்கிள்களின் விலை 250 முதல் 300 CC ICE வாகனங்களுக்கு சமமான விலையில் ரூ.2.39 லட்சமாக விற்கப்படுகிறது.