ஆசிரியையின் அழைப்பை ஏற்று அடுத்த நாளே வந்த அமைச்சர்
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த டி.புதூர் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர் வளர்மதி. இவர் சமூக வலைத்தளம் வாயிலாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம், தங்கள் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்யும்படி நேற்று(நவ.4) கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்ற அமைச்சர் இன்று அப்பள்ளியில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 'வளர்மதி டீச்சரைப் போன்று ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் OPEN CHALLENGE விட வேண்டும்' என்றார். நன்றி: சன் நியூஸ்