இசையை ரசிக்க மொழி ஒரு தடையில்லை என்று கூறுவார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழ் பாடல்களை பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அப்பெண் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' படத்தில் இடம்பெற்ற 'வா வாத்தி' பாடலையும், சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்றிருந்த அனல் மேலே பனித்துளி பாடலையும் அழகாக பாடியுள்ளார். அந்தப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பை பாராட்டி எக்ஸ் தள பயனர் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.