திருவள்ளூர் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கிய இருவர் ரயில்வே நடைமேடையில் ஒரு சூட்கேசை வைத்துவிட்டு வேகமாக நகர்ந்துள்ளனர். இதனைக் கண்ட ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை மடக்கிப் பிடித்து சூட்கேசை திறக்க வைத்தனர். அப்போது, சூட்கேசில் அடைத்து வைத்த நிலையில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, ஆந்திராவில் கொலை செய்து சூட்கேசில் அடைத்து கொண்டு வந்து சடலத்தை தமிழகத்தில் விட்டு செல்ல முயன்ற தந்தை, மகள் கைது செய்யப்பட்டனர்.