தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் 104 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 4 குழந்தைகள் கண் பார்வையை முற்றிலும் இழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், "சிகிச்சைக்காக வந்த 104 பேரில் 10க்கும் மேற்பட்டோர் கரு விழியில் பாதிப்பு (Corneal Tear), 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பார்வை பாதிப்பில் கண்கள் எடுக்கப்பட்டது (Enucleation)" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.