விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் விக்ரமன். இவர் தமிழின் முன்னணி ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6-ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கு பெறாமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் அவருக்கும், நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பீர்த்தி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.