ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். சர்க்கரை கரைந்ததும், வெட்டி வைத்த நெல்லிக்காய்களை சேர்த்து நன்கு கலக்கவும். குறைந்த தீயில் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். நெல்லிக்காய் சர்க்கரையை நன்றாக உறிஞ்சியதும், அதை சுத்தமான துணியில் பரப்பி நன்கு உலர விடவும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். சத்தான, ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் மிட்டாய் ரெடி.