தஞ்சாவூர் மாவட்டத்தின் சேதுபாவாசத்திரத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகில் உள்ள தென்னந்தோப்பில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிறந்த குழந்தையின் உடல் இன்று (நவ. 05) கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை பாட்டிலில் அடைத்து தூக்கி வீசியது யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.