நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி நடிகர் விஜயின் தீவிர ரசிகையாவார். அவரை தனது மூத்த மகனாக நினைத்து வாழ்ந்து வருவதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். வள்ளியம்மாள் என்ற அந்த மூதாட்டி தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் விஜய் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்த பின்பே தனது அன்றாட பணிகளை தொடங்குகிறார். விஜய் பிரதமர் ஆக வேண்டும் என்பது வள்ளியம்மாளின் விருப்பமாக உள்ளது.