திமுகவை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கட்சி கூட்டம் ஒன்றில் நேற்று (நவ. 04) பேசும் போது, “பிறந்த குழந்தை உடனடியாக பேசியதாக சரித்திரம் இல்லை, அப்படி பேசினால் அது பேய் என பயந்து விடுவார்கள். குழந்தை பேசி, நடப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது. ஒரு அரசியல் இயக்கம் தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடிக்க நினைப்பது நகைச்சுவையாக உள்ளது” என தவெக விஜயை விமர்சித்தார்.