ஈரோட்டை சேர்ந்த காளிமுத்து (57) என்பவர், கடந்த ஆண்டு அவரது தாய் உயிரிழந்த சோகத்தில் மதுவிற்கு அடிமையாகியுள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி காளிமுத்து கட்டிலில் படுத்துக் கொண்டு பீடியை பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை கட்டிலுக்கு கீழே போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த துணி மீது தீப்பற்றியதால், கட்டிலுடன் சேர்ந்து அவரும் எரிந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.