இயற்கை முறையில் காட்டுப்பன்றிகளை விரட்ட தமிழக அரசின் வேளாண்துறை சார்பில் இயற்கை விரட்டிகள் வழங்கப்படுகிறது. பயிர் செய்திருக்கும் நிலத்தைச் சுற்றி குச்சிகளை 10 அடி இடைவெளியில் நட வேண்டும். அதனை கட்டுக்கம்பி கொண்டு இணைத்து நடுவில் சிறிய டப்பாவில் மூடியில் துளையிட்டு பன்றிவிரட்டி மருந்துகளை 5.மி.லி அளவு ஊற்றி மூடி விட வேண்டும். இந்த வாசனை காரணமாக பன்றிகள் 3 மாதம் வரை எட்டிப் பார்க்காது.