2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இக்கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது 140 கோடி இந்தியர்களின் கனவு என கடந்தாண்டு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.