நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு இரு கிராமமக்கள் போராட்டம்
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியை பவானி நகராட்சியுடன் இணைக்க கூடாது என கிராம சபையில் ஊர்பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பவான நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குருப்பநாயக்கன்பா ளையம், ஆண்டிகுளம் ஊராட் சிகளையச் சேர்ந்த பொதுமக் கள் கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். பவானி நகராட்சி நிர்வாகத் துடன் குருப்பநாயக்கன்பாளை யம், ஆண்டிகுளம் ஊராட்சி களை இணைக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். இந்நிலையில், குருப்பநாயக் கன்பாளையம் ஊராட்சிப் பகு தியைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஊாவலமாகச் சென்று கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித் தனர். இதேபோல, ஆண்டிகு ளம் ஊராட்சியில் பொதுமக் கள் திரண்டு காடையம்பட்டி பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டதோடு, திடீர் மறி யல் போராட்டத்திலும் ஈடுபட் டனர். தொடர்ந்து, ஆண்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனர்.