வெறிச்சோடி காணப்பட்ட கூடுதுறை

71பார்த்தது
பவானியில் கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலய வளாகம், இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி மூன்றும் சங்கமிக்கும் கூடுதுறையில், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, புனித நீராடி, சங்கமேஸ்வரர் வேதநாயகி அம்மன் மற்றும் பெருமாள் சுவாமிகளை தரிசனம் செய்து செல்வர்.
மேலும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வர். பெண்கள் காவிரி தாயை வழிபட்டு புது மஞ்சள் கயிறை மாற்றிக் கொள்வர்.
இந்த நிலையில், மேட்டூர் அணை நிரம்பி காவிரி அணையில் இருந்து உபரிநீராக 1. 70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி கூடுதுறையில், பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குனிவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகாலை முதலே சொற்ப எண்ணிக்கையிலான பெத்த பிள்ளை கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு தினத்தில், பவானி கூடுதுறையில் பக்தர்களின் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய அமைக்கப்பட்ட செட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காக, அமைக்கப்பட்ட ஷவர்களின் மூலம் நீராடி சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி