புஞ்சைபுளியம்பட்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

64பார்த்தது
புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் தூர்வாரும் பணி நடக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே காவிலிபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் கோப்பம்பாளையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கோப்பம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், காவிலிபாளையம் குளத்தில் தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம்- காவிலிபாளையம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர் இந்த சாலை மறியலால் சத்தியமங்கலம்-காவிலிபாளயம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி