தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும்
ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் காவிரி ஆறு , பவானி ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி சங்கமிக்கும் இடம் ஆகும். இங்கே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், திருமணம் தடை, தோஷம் உள்ளிட்ட பல்வேறு பரிகாரங்கள் செய்வதற்காக ஆடி அமாவாசை தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை உள்ளிட்ட தினங்களில் கூடுதுறையில் பரிகார பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்துவிட்டு கூடுதுறை காவிரி ஆற்றில் நீராடி விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி மாகாளி அமாவாசை இன்று இன்று நாமக்கல் சேலம் கோவை திருப்பூர் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மட்டும் இன்றி ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தர்ப்பணம் மற்றும் பரிகாரங்கள் செய்ய வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு புனித நீராடி பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.