பவானி லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் மீட்பு
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அருகே எதிர்புறத்தில் தனியார் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் பவானி டி. எஸ். பி சந்திரசேகரன் தலைமையில் போலீசார் லாட்ஜில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த லாட்ஜில் இருந்த பெண்களும், ஆண்களும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து போலீசார் பிடித்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்களும், 3 ஆண்களை போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.