Sep 29, 2024, 04:09 IST/ஈரோடு நகரம்
ஈரோடு நகரம்
மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உட்பட பங்கேற்பு
Sep 29, 2024, 04:09 IST
ஈரோட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உட்பட 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் பெரிய அளவில் நடக்கும் மாரத்தானை போன்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் அளவில் ஈரோடு மாரத்தான் மூன்றாவது ஆண்டாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மற்றும் எஸ்பி ஜவகர் ஆகியோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்க தங்களை முன்பதிவு செய்து கொண்டு பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியானது 5, 10, 21 கி. மீ தூரம் என 3பிரிவின் கீழ் நடைபெற்ற மாரத்தானில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். மாரத்தான் போட்டியானது ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கி அருகில் உள்ள கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தானை தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னுசாமி, முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் கேகே பாலு சாமி பெருந்துறை சேப்டி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் ராசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.