முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஈரோட்டில் பேட்டி

69பார்த்தது
ஈரோட்டில் முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: -
ஏ. டி. எம் கொள்ளையர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் தான். ஏற்கனவே தான் காவல்துறை தலைவராக இருந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அடுத்தடுத்து ஏ. டி. எம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்துள்ளோம். அப்போது அந்த வடமாநில கொள்ளையர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தான் கைது செய்யப்பட்டனர். என்கவுண்டர்
போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுப்பது தங்களது உயிரையும், பொதுமக்களின் உயிரையும் பாதுகாக்க தான் எடுக்கின்றனர். தற்போது நடந்துள்ள என்கவுண்டர் மூலம் வடமாநில கொள்ளையர்களுக்கு பயம் ஏற்பட்டிருக்கும். இனி அவர்கள் தமிழகம் பக்கமே வர தயங்குவார்கள். இந்த சம்பவத்தில் தைரியமாக முடிவு எடுத்து தானே முன் நின்று காவல்துறை யினருக்கு ஆலோசனை வழங்கிய நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி