உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி திமுகவிற்கு பாதிப்பு

50பார்த்தது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 4 ஆண்டுகளில் துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பது தேர்தலின் போது திமுக விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு ஏற்கெனவே 100 முதல் 120 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்திய நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் மேலும் உயர்த்தியுள்ளதை திரும்பபெற வேண்டும் என்றார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பதில் எந்த கருத்தும் இல்லை என்றாலும், பல்வேறு மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது, 4 வருடங்களில் துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பதை மக்கள் கவனித்து கொண்டிருப்பதால், இது தேர்தலில் திமுக விற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி