பவானி - Bhavani

ஈரோடு: நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரிகளை சோதனை செய்த போலீசார்

ஈரோடு: நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரிகளை சோதனை செய்த போலீசார்

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 27-ம் தேதி 3 ஏ. டி. எம். களில் வடமாநில கும்பல் ரூ. 65 லட்சம் ரூபாய் பணத்தை காரில் சென்று கொள்ளையடித்து விட்டு காரை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தப்பி செல்ல முயன்ற போது வெப்படை காவல்நிலையம் நாமக்கல் எஸ். பி. தலைமையிலான தனிப்பட்டை போலீசார் இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். கண்டெய்னர் லாரியில் மறைந்திருந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்ட போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனத்தை சோதனை செய்யும் பணியில் ஈடுபட தொடங்கினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ். பி. ஜவகர் உத்தரவின் பேரில் காங்காபுரம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரியை சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது கொச்சின் துறைமுகம் நோக்கி எடுத்து செல்லப்பட கண்டெய்னர் லாரியில் இருந்த சரக்குகளின் உறுதி தன்மை, சரக்குகள் எடுத்துச்செல்ல வைத்திருந்த ஆவணங்கள் மற்றும் கண்டெய்னர் லாரியின் ஆவணங்கள் உண்மையானதா, டிரைவர் லைன்ஸ் உடன் செல்பவர்கள் குறித்த விவரங்கள் ஆகியவற்றை போலீசார் பரிசோதனை செய்து விசாரணை செய்தனர்.

வீடியோஸ்


ஈரோடு