நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது எதற்காக..?

85பார்த்தது
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது எதற்காக..?
முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம். எல். ஏ. வுமான ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

மதுவிலக்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது, முழுமையான மது விலக்கு இந்தியாவில் இருந்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் பர்மீட் முறையில் மது விலக்கு இருந்தது. மக்கள் திருந்தினால் மட்டுமே பூரண மது விலக்கை கொண்டு வர முடியும். மது விலக்கு என்று சொல்லும் குஜராத், பீகார் மாநிலங்களில் சாராயம் ஆறு போல ஓடிக்கொண்டு இருக்கிறது.

மது விலக்கு கொண்டு வர வேண்டுமானால் குடிபழக்கத்தில் இருந்து மக்கள் திருந்த வேண்டும். அதற்கு‌ கடுமையான பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முயற்சி செய்ய வேண்டும்.
இப்போது எல்லோருடைய வீட்டுப் பிள்ளையாக நடிகர் விஜய் உள்ள நிலையில், அவர் ஒரு சின்ன வட்டத்தை போட்டுக்கொண்டு அதில் இருப்பேன் என்று சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்வார்கள்?

பொதுவாக, கொள்கைகளை முன் வைத்து தான் கட்சிகளை ஆரம்பிப்பார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதேபோல், தமிழ் மொழி வாழவும் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற வேண்டும், இந்தி திணிப்பு கூடாது என்பதற்காகவும் திராவிட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆக, ஒவ்வொரு கட்சியும் தொடங்குவதற்கு மூலக்கருத்து உள்ளது என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி