பொட்டு வைக்கும்போது ஏற்படும் அரிப்புக்கு முக்கிய காரணம் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள கெமிக்கல்கள். பொட்டு வைக்கும் இடத்தில் ஈரப்பதம் இல்லாததாலும், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வைப்பதாலும் ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் அதன் தடம் பதியத் தொடங்கும். தரமான பிராண்டின் ஸ்டிக்கர் பொட்டுகளில் பசையானது அலர்ஜியை ஏற்படுத்தாது. ஒருவேளை குங்குமம், சாந்துப் பொட்டு வைப்பவர் என்றால் அவற்றுக்கும் இது பொருந்தும்.