நிலக்கோட்டை - Nilakottai

கொடைக்கானல் இருந்து அடுக்கம் செல்லும் சாலையில் நிலச்சரிவு

பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று (அக்.22) இரவு பெய்த கன மழையால் பெரியகுளம் அடுக்கம் வழியாக கொடைக்கானல் சாலையில் மூன்று இடங்களில் மண் சரிவு, ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையை மூடியுள்ளது. இதனால் பெரியகுளத்தில் இருந்து அடுக்கும் வழியாக கொடைக்கானல் சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் மண் சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பாறைகளை வெடிவைத்து தகர்த்தால் மட்டுமே அப்புறப்படுத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் சரிந்து விழுந்துள்ள ராட்சத பாறைகள் மற்றும் மண் குவியல்கள் மற்றும் மரங்களை அகற்ற 4 முதல் 5 நாட்கள் ஆகும் என்பதோடு மழை பொழிவு நேரம் மற்றும் இரவு நேரத்தில் கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியான பெரியகுளம் சாலையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా