கொடைக்கானல்: தேடுதல் வேட்டையில் கொடைக்கானல் காவல்துறையினர்.

77பார்த்தது
மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் கொடைக்கானல் காவல்துறையினர்.

மேல்மலை கிராமங்களில் மன்னவனூர் பகுதியில் போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட வரை கொடைக்கானல் காவல்துறையினர் கைது செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் அழகினை ரசிப்பதற்கு பல நாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பதாக தகவல் கிடைத்தது.

நேற்று மேல்மலை கிராமங்களில் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் சோதனை மேற்கொண்டன. மன்னவனூர் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலாஜியின் மகன் கோபி வயது 31 கையும் களவுமாய் மாட்டிக்கொண்டார். அவரை கைது செய்து கொடைக்கானல் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டன
இது போன்ற சம்பவங்கள் மேல்மலை கிராமங்களில் அதிக அளவு இருந்த நிலையில் கொடைக்கானல் துணை கண்காணிப்பாளர் மதுமதி மற்றும் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன அவர்களின் தலைமையில் உள்ள காவல் அதிகாரிகள் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதனால் பொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டி வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி