திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர் இதில் கணக்கில் வராத ரூபாய் 82 ஆயிரத்து தொள்ளாயிரம் பணம் கைப்பற்றப்பட்டது
வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு பொதுமக்களிடம் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனைத் தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் ரூபாய் 82 ஆயிரத்து 900 கணக்கில் வராத பணம் இருப்பதைக் கண்டு அதனை கைப்பற்றினர்
இது தொடர்பாக சர்பதிவாளர் துரைச்சாமி மற்றும் ஊழியர்களிடம் நள்ளிரவு வரை தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்
மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வத்தலகுண்டு பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.