முளைப்பாரி எடுத்து வந்து தங்கள் குழந்தைகளை அ எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் விஜயதசமி நாளை யொட்டி அங்கன்வாடி மையங்களில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்
காந்திநகர் கன்னிமார் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை சேர்க்க வந்த பெற்றோர்கள் முளைப்பாரி வளர்த்து எடுத்து வந்தனர்
குழந்தைகளையும் பெற்றோர்களையும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆரத்தி எடுத்து அங்கன்வாடி மையத்திற்கு வரவேற்றனர்
வரிசையாக அமர்ந்த பெற்றோர்கள் மற்றும் அவர் குழந்தைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த நெல்லில் தங்கள் குழந்தைக்கு தமிழில் முதல் எழுத்தான அ சொல்லி எழுத வைத்தனர்
வத்தலகுண்டு பகுதி அங்கன்வாடி மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் சேர்க்கை விஜயதசமி நாளான இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.