வத்தலகுண்டு: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா

70பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தருமத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஒரு நாள் இரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இத்திருவிழாவில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு விடிய விடிய கறி விருந்து நடைபெற்றது.

முன்னதாக கோவில் முதன்மை காரர்கள் உள்ளிட்ட ஆண்கள் ஒன்று கூடி கோட்டை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து படைத்தனர்.

பின்னர் நடந்த கோட்டை கருப்பண்ணசாமி வேட்டைக்குச் சென்று ஆகாய பூஜை கொடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து கோவிலுக்கு பக்தர்களால் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது.

கோவில் பாரம்பரிய வழக்கப்படி பச்சரிசி அன்னம் சமைக்கப்பட்டு திருப்பதி லட்டு போல் கைகளால் உருண்டையாக உருட்டப்பட்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டது.

பலியிடப்பட்ட ஆடுகள் சமைக்கப்பட்டு பச்சரிசி சோறு உருண்டையுடன் கறி விருந்து பரிமாறப்பட்டது.

அப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பொழிந்து கொண்டிருந்தது இதனையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விடிய விடிய நடந்த இந்த கறி விருந்தில் விருவீடு மற்றும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

பழமை மாறாமல் நடைபெறும் இந்த கிராமத்து திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி