அம்மையநாயக்கனூர்: கல்லறை தோட்ட இடத்தை மீட்டு தர கோரி மனு

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மைநாயக்கனூர் சி எஸ் ஐ தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு 1950 முதல் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவர் போலி ஆவணம் மூலம் கல்லறை தோட்டத்தை தனது இடம் எனக்கூறி அங்கு இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு இடையூறு செய்கிறார். மேலும் கல்லறை இடத்தை ஆக்கிரமித்து செய்து அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்.
கல்லறை தோட்ட இடத்தை அபகரிக்க முயற்சி செய்யும் நபரிடமிருந்து அந்த இடத்தை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பங்குதந்தை பிரபுதாஸ் அப்பகுதி பொதுமக்களுடன் புகார் மனு அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி