திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் பகுதியில் உள்ள அழகை கண்டு ரசிக்காமல் ஆபத்தை விளைவிக்கும் பகுதிக்கு ஆபத்தான முறையில் சுற்றுலாவை பயணத்தை மேற்கொள்கின்றனர் தற்போது கொடைக்கானல் அதன் போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையை பொருட்படுத்தாமல்சரக்கு வாகனங்களிலும் ஜீப் போன்ற வாகனங்களை பயன்படுத்தி சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர் இவ்வாறு மேற்கொள்ளும் போது காற்றாற்று வெள்ளம் சாலை மிக மோசமான பகுதியில் செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படும் நிலைமை ஏற்பட்டு வருகிறது ஏதாவது விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டால் அவ்விடத்திற்கு அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சரியான பாதை இல்லை எனவே ஏதாவது விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வகையான ஆபத்தை விளைவிக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு முறையான வாகனத்தில் அனுமதித்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கை