நாடு முழுவதும் விஜயதசமி விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேசமயம் ஶ்ரீ சீரடி சாய்பாபாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம் பகுதியில் 5. 8 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான பீடத்தில் கருவறையில் உள்ள சாய்பாபாவின் திருவுருவ சிலைக்கு திண்டுக்கல் மக்கள் மட்டுமின்றி மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தங்களின் திருகரங்களால் பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து ஆரத்தி பாடல்கள் இசைக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பாலபிஷேகம் மற்றும் தீபாராதனையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.