திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் பண்டிகை மற்றும் வார விடுமுறை காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளனர். இந்நிலையில் காலையில் கேரளா மாநிலத்திலிருந்து சுற்றுலா வந்த 5 பேர் மீண்டும் கேரளாவை நோக்கி செல்லும் பொழுது கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள மூளையார் என்ற பகுதியில் ராட்சச மரம் வாகனத்தின் மீது விழுந்ததில் வாகனத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது மற்றும் வாகன ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்டது. பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு மேல் சிகிச்சைக்காக தேனியில் உள்ள கானா விளக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.