புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கை பட்டகம்
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் உலகப் புகழ்பெற்ற கொடைக்கானல் மலை வெள்ளைப்பூண்டு அதிகபடியாக பயிரிடப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மலை வெள்ளைப்பூண்டு அதிக மருத்துவ குணம் கொண்டதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வாங்கி செல்வார்கள். இந்நிலையில் கடந்த 2018 இல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் புவிசார் குறியீடு பெற்றுத் தந்தனர் இந்நிலையில் கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு உலகம் தர வாய்ந்ததாக மாறியது. மேலும் சைனா பூண்டு மகாராஷ்டிரா மத்திய பிரதேஷ் காஷ்மீர் ஹிமாச்சல பிரதேஷ் போன்ற பகுதியிலிருந்து பயிரிடக்கூடிய வெள்ளை பூண்டு 3 மாதங்களில் சாகுபடிக்கு வரும், ஆனால் கொடைக்கானல் மலை வெள்ளைப் பூண்டு ஆறு மாதத்தில் சாகுபடிக்கு வரும். சில பகுதிகளில் மலைப்பூண்டு என்று இரண்டாம் ரக பூண்டுகளாக விற்பதால் பூண்டின் தரம் ஆய்வு செய்வதற்கு சிறிய அளவிலான கை பெட்டகம் மற்றும் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்பவர்களுக்கான பி வி ஆர் இயந்தை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. இயந்திரத்தை இன்று NABARD தலைமை பொது மேலாளர் அவர்கள் அறிமுக படுத்தினார் இயந்திரத்தின் உபகரணங்களை உருவாக்குவதற்கு 17 லட்சம் செலவாகும் சங்கத்தில் உள்ள 750 விவசாய மக்களுக்கு 350 ரூபாய் விலையில் கொடுக்கப்பட உள்ளது. இதனை 10 முறை பயன் படுத்தலாம் ஒரு முறைக்கு 35ரூபாய் செலவு ஆகும் என்று கூறப்படுகிறது.