திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் சில தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆறு பேர் குழுவாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் முன்பின் என இரவு நேரத்தில் பயணித்துள்ளனர்.
கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக திங்கட்கிழமை சுமார் இரவு பதினோரு மணி அளவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்பாக சென்ற இருசக்கரத்தை இடித்து பாறையில் மோதியுள்ளது.
இதனால் சம்பவ இடத்தில் ராஜேஷ் 27 என்ற இளைஞர் உயிரிழந்தார்.
மேலும் சம்பவம் அறிந்து கொடைக்கானல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து செவ்வாய்க்கிழமையான இன்று கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் ராஜேஷின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.