திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தலைமை கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்துள்ளது
இதனை அடுத்து நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார், வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மற்றும் போலீசார் உடனடியாக பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்து மற்றும் பயணிகள், பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்போர் என அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்
பேருந்து நிலையத்திற்குள் மற்ற பேருந்துகளை நுழைய விடாமல் பேருந்து நிலையத்தை அடைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது
பதட்டமான சூழ்நிலையில் மிரட்டல் விடுத்தவர் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் மதுரை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போனில் இருந்து அழைப்பு வந்ததுள்ளது தெரிய வந்தது
வெடிகுண்டு மிரட்டல் விட்டு அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததும் நிம்மதி அடைந்த போலீசார் தவறான அழைப்பு என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் மூடி வைக்கப்பட்டிருந்த பேருந்து நிலையத்தை திறந்து பேருந்து மற்றும் பயணிகளை அனுமதித்தனர்
மனநலம் பாதிக்கப்பட்டவரின் இந்த செயலால் அதிகாலை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது
இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.