திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதங்களாகவே கஞ்சா மற்றும் போதை காளான் விற்பவர்கள் மேல் மற்றும் வாங்குவார்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கொடைக்கானலில் முக்கிய பகுதிகளில் காளான் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் போதைக்காலம் விற்க முயன்ற நவீன் வயது 21 அகமது ரசீம் வயது 27 ஆகிய இரு இளைஞர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கொடைக்கானல் சுற்றுலா பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.