திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள அடுக்கம் கிராமம் உள்ளது. கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்வதற்கு எளிதாக அடுக்கம் வழியாக நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று பெய்த கனமழை காரணத்தால் அடுக்கம் பகுதியில் மண் செறிவு ஏற்பட்ட காரணத்தால் சாலை முழுவதும் பெரும் பாறைகளாகவும் மண்கள் மூடி போக்குவரத்து தடை ஏற்பட்டது மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீராக இருந்த தண்ணீர் தொட்டியும் பெய்த கனமழை காரணத்தால் அடித்து செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையில் இருந்து இரவு இரண்டு பொக்லைன் இயந்திரம் தற்காலிகமாக சாலைகள் உள்ள பாறைகளை ஒதுக்கி விடப்பட்டன.
மேலும் இன்று காலை 10 மணி அளவில் பாறைகளை அகற்றும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மண் அரிவாள் விழுந்த பாறைகளை உடைத்து அப்பகுதியில் இருந்து அகற்றி மண் சரி சரிவால் உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றன.
அடுக்கம் பகுதி பொதுமக்களுக்கு தற்போது வரை போக்குவரத்து வசதி இல்லை அவரவர் சொந்த வாகனத்தில் பயணிக்கின்றார்கள் பணம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு அரசு சார்பாக அரசு பேருந்து அமைத்து தருமாறு கோரிக்கை வைக்கின்றனர்.