திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ முனியப்ப சாமி திருக்கோவில் பங்குனி மாத பெருந்திருவிழா கடந்த வாரம் புனித தீர்த்தமாடி காப்பு கட்டி ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான இன்று 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்தி மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். இதில் தீச்சட்டி ஏந்தியபடி வந்த ஆண் பக்தர்கள் நடனம் ஆடிய காட்சி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.