திண்டுக்கல்லில் இருந்து 20 கி.மீ தொலைவில் மலைக்கு மேல் சிறுமலை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு புதூர், பழையூர் மற்றும் தென்மலை என மூன்று மலைக்கிராமங்கள் உள்ளன. 4000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக புதூர் பகுதியில் 3 மின்கம்பங்களும், தென்மலை பகுதியில் 2 மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. இந்த நிலையில், புதூர், பழையூர் மற்றும் தென்மலை என மூன்று கிராமங்களும் மின்சாரம் இல்லாமல் இரண்டு நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.
மேலும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்க முடியாமல் தண்ணீர் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது என பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.