மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி உள்ளிட்டோர், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடி கடன் பெற்று 2018ல் வெளிநாடு தப்பினர். இது தொடர்பாக ED மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். சோக்சி பெல்ஜியத்தில் தங்கியிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்த இந்தியா கோரியுள்ளது.