திண்டுக்கல்: சமூக பொறுப்பு நிதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

83பார்த்தது
திண்டுக்கல் பார்சன் ஹோட்டலில் சமூக பொறுப்பு நிதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் இன்று(05. 04. 2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: -

தமிழ்நாடு அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு நிதியிலிருந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில பணிகள் பொதுமக்களின் பங்களிப்பபுடன் நமக்குநாமே திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுகாதார கட்டமைப்பு, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி கட்டமைப்பு, நமக்கு நாமே திட்டம், தாய்மை திட்டம், கல்லூரி கனவு, தொழிற்கல்வி, மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள், கற்கை நன்றே ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, திண்டுக்கல் வணிகர் சங்கத்தினருடன் கைகோர்ப்போம் கட்டமைப்போம் என்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி