திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பள்ளப்பட்டி ஊராட்சி தேவர் நகர் பகுதியில் 12 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த குப்பைத்தொட்டியில் குப்பைகள் அதிகமாக இருப்பதால் தீ வைக்கப்பட்டது. தீ எரிந்து முடிந்த பின்பு குப்பைத்தொட்டியில் புகை அதிகமாக வெளியேறியது. அருகில் சாலை இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.