பாப்பாரப்பட்டியில் சீத்தாராம் யெச்சூரிக்கு அஞ்சலி
இந்தியா முழுவதும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய தலைவர் சீத்தாராம் யெச்சூரி மறைவதற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவஞ்சலி அனுசரிக்கப்படும் சூழலில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டியில் இன்று (செப்டம்பர் 13) பிற்பகல் 2 மணி அளவில் மாவட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய தலைவர் சீத்தாராம் யெச்சூரி மரணம் அடைந்ததற்கு பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உடன் ஆர். சக்திவேல் மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் ஆர். சின்னசாமி, ஆர். சி. சின்னசாமி, டிஆர். சின்னசாமி, காங்கிரஸ் தங்கராசு, திமுக தர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.