தர்மபுரி மாவட்டம் அன்னசாகரத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கனகராஜ் விவசாயி. இன்று(செப்.12) வீட்டில் இருந்த புறப்பட்டு நெடு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராதாதை அடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
அப்போது அருகாமையிலுள்ள விவசாய கிணற்றின் அருகே கனகராஜ் சென்றிருந்த இருசக்கர வாகனமும், அவருடைய காலணியும் அங்கு இருந்தது. இதனால் அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், இது குறித்து தர்மபுரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்பு கிணற்றுக்குள் தேடும் பணியில் தீயணைப்பு மீட்புத்துறையினர் கனகராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் விசாரணை செய்தபோது கிணற்றுக்குள் கனகராஜ் தவறி விழுந்து இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.