ஒகேனக்கலில் 17, 000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

79பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு.

சமீப நாட்களாக தமிழக மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழையின் அளவைப் பொறுத்து நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வரும் சூழலில், நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 16, 000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 17, 000 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் குறிக்க தொடர்ந்து இன்று நான்காவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி